செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

நகரத்தாரும், கார்காத்தாரும்


நாட்டுக்கோட்டை நகரத்தார் குலப் பெண்கள், அதாவது செட்டிநாட்டு ஆச்சிகள் அனைவருமே, கார்கார்த்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் என டாக்டர். திரு. ஏ.சி. முத்தையா செட்டியார் அவர்களின் மனைவி திருமதி. தேவகி முத்தையா, எழுதிய நகரத்தார் வரலாறு குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


கட்டுரை - http://www.devakimuthiah.com/arulkoornthu.html

மேலும், கட்டுரையில்,

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் குலத்துப் பெண்கள் யாருமே உயிரோடு இல்லாத நிலையில் இருந்தனர்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் ரத்ன மகுட வைசியர் என்பதால், மன்னனின் முடிசூட்டு விழாவை அவர்கள் தான் நடத்தி வைக்க வேண்டும்.  முடி சூட்டுவதற்குத் திருமணமானவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதால், உயிர் பிழைத்த ஒன்பது நகரத்து வாலிபர்களுக்கும், ஒன்பது கார்காத்த வேளாளர் குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

எங்கள் நகரத்தார் குலத்துப் பெண்கள் அனைவருமே கார்காத்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் ஆவர்.  இதை நிலைநாட்டுவதற்கென்றே, எங்கள் குலத்துப் பெண்கள் அனைவருக்கும் வேளாளர் குல மடமாகிய, துலாவூர் திருமடத்தின் ஆதீனம் தான் உபதேசம் செய்து வைப்பார்கள்.

நான் மட்டுமல்ல, எங்கள் குலத்துப் பெண்கள் அனைவருமே கார்காத்த வேளாளர் குலத்து மகள்களே என திருமதி. தேவகி முத்தையா குறிப்பிடுகிறார்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மதிப்பிகுரியீர் ,நான் சைவ பிள்ளை,வங்காரமுடையார் கோத்திரத்தில் பிறந்தவன்.என் குல தெய்வம் தெரிய வில்லை.துலாவூர் ஆதினம் முலம் தெரிஞ்சிக்க முடியுமா மேடம்?

krishnamoorthy s p சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக